சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 பேர் பலியானதாக தகவல்

0
4179

சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 9:19 மணிக்கு சிச்சுவான் மாகாணத் தலைநகர் செங்குடுவில் இந்த பூகம்பம் ஏற்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏறத்தாழ 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக ஏராளனமான வணிக வளாகங்கள், வீடுகள் பெரிய அளவில் ஆட்டம் கண்டது. இதனால் மக்கள் அலறியடித்து ஓடி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் இடிபாடுகளில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர், இளைஞர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here