தெலுங்கில் தயாராகும் ‘உய்யலவாடா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க ரூ.6 கோடி சம்பளம் கேட்டு பட உலகை அதிர வைத்து உள்ளார் நயன்தாரா

0
134

தெலுங்கில் தயாராகும் ‘உய்யலவாடா நரசிம்ம ரெட்டி’
என்ற படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க ரூ.6 கோடி
சம்பளம் கேட்டு பட உலகை அதிர வைத்து உள்ளார் நயன்தாரா

ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த சுதந்திர போராட்ட
வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம்
தயாராகிறது.

ரூ.6 கோடி சம்பளம்

இதில் சிரஞ்சீவி சுதந்திர போராட்ட வீரர் கதாபாத்திரத்தில்
நடிக்கிறார். இந்த படத்தை சிரஞ்சீவி மகன் ராம்சரண்
ரூ.150 கோடி செலவில் தயாரிக்கிறார். சுரேந்திர ரெட்டி
இயக்குகிறார்.

இந்த படம் தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 3 மொழிகளில்
தயாராவதாலும் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடிக்க
வேண்டியிருப்பதாலும் நயன்தாரா ரூ.6 கோடி கேட்பதாக
கூறப்படுகிறது.

அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்ய
ராம்சரண் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி
உள்ளது. இந்த படத்தில் அமிதாப்பச்சனும் முக்கிய
கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here