விஸ்வகா்மா பூஜையை நாடு முழுவதும கொண்டாட ஏற்பாடு

0
229

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/HLcnvARksVA” frameborder=”0″ allowfullscreen></iframe>

சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தேசத்தின் ஆணிவேராகவும், எல்லா கலைகளுக்கும் மூலவித்தாகவும், ஹிந்து மதத்தின் தலைமகனாகவும், 2300 வருடங்களுக்கு முன் படையெடுத்து வந்த அலெக்சாண்டர் முதல் தற்போது இந்தியாவிற்கு சுற்றுபயணம் வரும் வெளிநாட்டுக்காரர்கள் வரை வந்து பிரமித்து பார்க்கும் அனைத்து கலைப் பொக்கிஷங்களையும் படைத்து இந்தியாவின் அடையாளமாகவே உலகின் முதல் வேதமான ரிக் வேதம் ஸ்ரீவிஸ்வகர்மா-வை அனைத்து கடவுள்களையும் படைத்தவர் என்றும் அவர்களுக்கு பெயரிட்டவர் என்றும் பிரபஞ்சத்தின் மூலக்கருவையே தோற்றுவித்தவர் என்றும் 10ம் அதிகாரம் முழுவதும் தெளிவாக கூறுகிறது. ரிக் வேதம் மட்டுமல்ல, யஜுர், சாம, அதர்வணம் என அனைத்து வேதங்களும் நம் கடவுள் ஸ்ரீவிஸ்வகர்மாவை துதிப்பாடுகின்றன. எந்த யாகம் நடத்தப்பட்டாலும் அதில் ஸ்ரீவிஸ்வகர்மாவிற்கு உரிய அவில்பாகம் கொடுக்கப்படுகிறது. எந்த கோயில் கும்பாபிஷேகம் நடந்தாலும் புனித நீரை நம் குலக்கடவுள் ஸ்ரீவிஸ்வகர்மாவின் பெயரை சொல்லி தான் தெளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த கடவுளை நாம், அதாவது அவரின் குழந்தைகள் மறந்து விட்டு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். நம்மை வீழ்த்த நினைத்தவர்கள் 11ம் நுரற்றாண்டில் செய்து வைத்த தவறான, குழப்பமான மற்றும் நம் சமுதாயத்தையே வேரறுக்கும் அளவிற்கு நம்மையும் நம் குலக்கடவுளையும் பிரித்து வைக்கும் படியான வழிபாட்டு முறையை தான் நாம் தற்போது பின்பற்றிக் கொண்டு இருக்கிறோம். இந்த தவறான முறையால் நாம் நம் கடவுளை மறந்து விட்டோம் அல்லது இழந்து விட்டோம் அல்லது தவறாக வணங்கிக் கொண்டிருக்கிறோம். அந்த காலக்கட்டத்தில் தான் நமது ஸ்ரீவிஸ்வகர்மாவின் புகழைப்பரப்பி வந்த நமது மடங்கள் எல்லாம் வலுக்கட்டாயமாக சைவ(சிவ)மடங்களாக மாற்றப்பட்டன. அங்கு சிவபெருமானுக்கும், லிங்கத்திற்கும் தான் முக்கியத்துவம் தரப்படும் படி செய்யப்பட்டன. இதன்படி ஸ்ரீவிஸ்வகர்மாவை மறக்கடிக்க செய்து விட்டனர். நம்மையும் நம் கடவுளையும் பிரித்து வைக்கும் அந்த தவறான முறையை மாற்றி அமைத்து மீண்டும் நம் விஸ்வகர்மா இன மக்களை அதாவது ஸ்ரீவிஸ்வகர்மாவின் குழந்தைகளை மீண்டும் ஸ்ரீவிஸ்வகர்மாவின் பக்தர்களாக மாற்றுவதே எங்களின் புனிதமான லட்சியமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here