கொடைக்கானல் மன்னவனூர் உள்ளிட்ட மலைகிராமங்களில் பாரம்பரிய மிக்க மஞ்சுவிரட்டு நடைபெற்றது

0
137

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் உள்ள  மேல்மலை கிராமங்களில் 50 கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன.. இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழிளாக  உள்ளது .. இங்கு கடந்த 50 வருடங்களுக்கு முன்பு வரை ஒருசில நிலப்பரப்புகளில் விவசாயிகள் நெல் நடவு செய்து மகசூல் செய்து வந்தனர் ..அந்த நேரத்தில் நிலத்தினை பண்படுத்த அதிக அளவு உழவு மாடுகளை பயன்படுத்தி உள்ளனர் .. ஆனால் தற்பொழுது மலைக்காய்கறிகளை விளைவிப்பதில் ஆர்வம் காட்டிவந்தாலும் தாங்கள் வளர்த்து வரும் உழவு மாடுகளின் திறன் சோதிக்கும் விதமாக பாரம்பரிய மிக்க மஞ்சுவிரட்டு போட்டிகளில் ஈடுபடுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்  ..இந்த ஆண்டு மாட்டு பொங்கலை முன்னிட்டு மேல்மலை கிராமங்களான மன்னவனூர் ,பூண்டி,கிளாவரை,கும்பூர்,கீழானவயல் உள்ளிட்ட மலைகிராமங்களில் 1000 திற்கும் மேற்பட்ட உழவு மாடுகளை வர்ணம் பூசி அழகு செய்து மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்க வைத்தனர்.. இந்த போட்டிகளை கிராம  மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here