ஆயிரம் அரிவாள் கோட்டைகருப்பண்ணசாமி அரிவாள்களை பக்தர்கள் செலுத்தி வழிபாடு

0
124

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே முத்துலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் ஸ்ரீ கோட்டைகருப்பண்ணசாமி கோவில் உள்ளது.இக் கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோவிலாகும்.நிலக்கோட்டை ஜமீனாக இருந்த கூலப்பநாயக்கர் காலத்திலிருந்து இக் கோவிலில் வருடந்தோறும் தமிழ் வருடம் தை 3ம் தேதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருவதாக ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர். நேற்று இத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இக் கோவிலில் பக்தர்கள் தங்கள் குறைகளை தீர்க்க வேண்டி கருப்பண்ன சுவாமியிடம் வேண்டிக்கொள்கின்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேறினால் சுவாமிக்கு காணிக்கையாக அரிவாள்களை திருவிழா நாளில் கோட்டை கருப்பணசாமிக்கு காணிக்கையாக அளிக்கின்றனர். திருவிழா நாளன்று சுவாமிக்கு பட்டாடை அணிவிப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அதன் பின்பு மேளதாளம் முழங்ககோவில் பூசாரி மற்றும் சாமியாடி ஆகியோர் அரிவாள்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.  ஆயிரக்கணக்கான அரிவாள்களை பக்தர்கள் மற்றும் வேண்டிக்கொண்டவர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவிலில் சமர்பித்தனர். அரிவாள்கள் சுமார் 2 அடி முதல் 16 அடி வரை செய்யப்படுகின்றன.அரிவாள்கள் பலவகையான வடிவங்களில் செய்யப்படுகின்றன. குறிப்பாக ஒரே பிடியில் 2 முதல் 20 அரிவாள்கள் இருக்குமாறும்,அரிவாள்களில் மணி இருக்குமாறும் செய்யப்படுகின்றன. இரும்பு பிடி, மர பிடியிலும் அரிவாள்கள் செய்துள்ளனர். இவ் அரிவாள் செய்யும் பணியில் இந்த ஊரைச் சேர்ந்த ஆகிய 5 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பரம்பரையாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த அரிவாள்களை மார்கழி மாதம் முதல் செய்ய ஆரம்பிக்கும் பணி தை மாதம் 2 ஆம் தேதி முடிவடைகின்றது. தை 3ம் தேதி அரிவாள் செய்த ஆசாரிகள் வீட்டில் சிறப்பு பூஜைகளை செய்கின்றனர். அதன் பின்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்த வருடம் கருப்புச்சாமியின் உருவம் பொறித்து அரிவாள்கள்களும், காணிக்கை செலுத்துபவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டும் அரிவாள்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். கோவிலின் பரம்பரை பூசாரி ராமசாமி கூறியதாவது, இக் கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. சென்ற வருடம் 1000 அரிவாள்களுக்கு மேல் காணிக்கையாக வந்தது.இந்த வருடம் 1000 அரிவாள்களுக்கு மேல் வந்துள்ளதாக தெரிவித்தார். திருவிழாவை முன்னிட்டு கிடா வெட்டு நிகழ்சிகள்,விளையாட்டுப் போட்டிகள்,கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலக்கோட்டை டி.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் பட்டிவீரன்பட்டி போலீசார் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here