அதிமுகவில் புதிய உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள இளைஞர்கள் ஆர்வம் என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பெருமிதம்

0
170

வத்தலக்குண்டுவில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கும் துவக்க விழா வனத்துறை அமைச்சர் சீனிவாசன் துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றியம் ஜி.தும்மலப்பட்டியில் அம்மா அவர்களின் நல்லாசியுடன் வத்தலக்குண்டு ஒன்றியம் ஜி.தும்மலப்பட்டியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிää துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆசியுடன் வத்தலக்குண்டு ஒன்றியம் தும்மலப்பட்டியில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கும் துவக்க விழா நடைபெற்றது. தமிழக வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் முதல் படிவத்தை கொடுத்து விழாவினை துவக்கி வைத்து பேசும் போது தற்போது அம்மாவின் வழியில் சிறப்பான முறையில் ஆட்சி நடைபெற்று வருகின்றது. தமிழக மக்களுக்கு ஏழை எளிய விவசாய மக்களுக்கு ஏராளமான திட்டங்களை நாள்தோறும் வழங்கி வருகின்றது. எந்த வித குற்றச்சாட்டுக்கு இடம் இல்லாமல் உண்மையான மக்கள் சேவையை அம்மாவின் வழியில் செயல்படுத்தி வருவதால் தமிழக மக்கள் அதிமுகவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்துள்ளனர் . இளைஞர்களுக்கு தனியார் மற்றும் அரசு துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கி வருவதால் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் அதிமுகவில் தங்களை புதிய உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு சேவையாற்ற வேண்டும் என விரும்புகின்றனர். புதிய வாக்காளர்களாக பிரவேசம் செய்யும் புதிய இளைஞர்கள் அதிமுக அரசியலை தேர்ந்தெடுப்பது அம்மாவின் சேவையை வெளிபடுத்துகின்றது. இதனால் நான் மிகுந்து பெருமிதம் கொள்கின்றேன் என பேசினார். விழாவில் ஒன்றிய கழக செயலாளர் எம்.வி.எம்.பாண்டியன் நகர செயலாளர் பீர்முகமது முன்னாள் யூனியன் பெருந்தலைவர் மோகன் மாவட்ட மகளிரணி செயலாளர் வளர்மதி வத்தலக்குண்டு பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரும் மக்கள் சேவகருமான நாகூர்கனி கூட்டுறவு சங்க தலைவர்கள் செல்லப்பாண்டி ஜெயபாண்டி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அன்னக்களஞ்சியம் ஒன்றிய மீனவரணி செயலாளர் ரத்தினம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு வினோத்கண்ணா கூட்டுறவு வீடுகட்டும் சங்க இயக்குநர் நல்லமுகமதுää பட்டிவீரன்பட்டி பேரூர் செயலாளர் ராஜசேகரன் ஒன்றிய அவைத்தலைவர் உதயகுமார் ஒன்றிய சிறுபான்மை செயலாளர் ஜான் கணவாய்பட்டி ஊராட்சி முன்னாள் துணை தலைவர் காசிராஜன் டீக்கடை பிச்சை மூர்த்தி மருதுபாண்டி வங்கி லதாஜெயராமன் மேட்டுப்பட்டி பெரியண்ணன் செல்வராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here