மின்சாரம் மற்றும் நீர் தட்டுப்பாட்டை போக்க மாற்று ஏற்பாடு அறிவியல் கண்காட்சி

0
158

திண்டுக்கல் மாவட்டம வத்தலக்குண்டு கணவாய்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப் சிபிஎஸ்இ பள்ளியில் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் முனைவர். ரவி கலந்து கொண்டு மின்சாரம் மற்றும் நீர் தட்டுப்பாட்டை போக்க மாற்று ஏற்பாடு கண்ட பர்ஸ்ட் ஸ்டெப் பள்ளி மாணவர்களை பாராட்டினார் இக்கண்காட்;சிக்கு பள்ளி தலைவர் தங்கமுத்து தலைமையேற்றார். பள்ளி செயலாளர்ää கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். தலைமை விருந்தினராக மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் முனைவர். ரவி கலந்து கொண்டனர். அவர் தனது சிறப்புரையில் கூறும் போது தற்போது கல்வியில் உள்ள ஒப்பீட்டு முறை. தரமதிப்பீட்டு முறைகளில் உள்ள குறைகளை கலைந்து ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் உள்ள தனி திறமையை கண்டறிந்து மேம்படுத்தும் விதமாக கல்வி இருக்க வேண்டும். அந்த நடைமுறைகளை பர்ஸ்ட் ஸ்டெப் பள்ளி படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஒவ்வொரு துறையிலும் மாணவர்கள் மேம்படுத்தும் விதமாக விளையாட்டு அறிவியல் சமுக அறிவியல் நிர்வாகம் கணிதம் மென்பொருள் போன்ற ஒவ்வொரு பாடத்திற்கும் தனிக்கவனம் செலுத்தி அதில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கூடுததிறன் வளர்க்கும் விதமாக செயல்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. கண்காட்சியில் நீர் சேமிக்கும் விதம் மின்சாரம் சேமிக்கும் தொழில் றுட்பம் செயல்படுத்தி காட்டியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது என்று கூறினார் அறிவியல் கண்காட்சியின் ஒரு அங்கமாக வினாடி வினா போட்டி படம் வரைதல் கதை சொல்லலுதல் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. பட்டிவீரன்பட்டி லட்சுமி நாரயணா பள்ளி மற்றும் திண்டுக்கல் பார்வதி அனுகிரகா இண்டர்நேசனல் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் பதில் அளித்தனர். போட்டியில் வெற்றிப்பெற்ற அனைவருக்கும் பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தாளாளர் கயல்விழி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பசுவப்பிரியாää வினோத்குமார்ää ரியா குருதேவி; ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளா் – என்.அசோக் – 9842875362

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here