நத்தம் துரைக்கமலம் அரசு மேல்நிலைப்பள்ளி  முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு விழா 20ஆண்டுகளுக்கு பிறகு

0
90

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் துரைக்கமலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1995&97ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவ&மாணவிகள் சந்திப்பு விழா நடந்தது. இதில் பல்வேறு அரசுத்துறையிலும், தனியார் துறையிலும் பணியாற்றக் கூடியவர்கள் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து பள்ளியில் படிக்கும் போது நடந்த கடந்த கால நிகழ்வுகளை ஒவ்வொருவரும் கண்ணீர் மல்க உருக்கமாக பேசினார்கள். பின்னர் அப்போது பணியாற்றிய ஆசிரியர், ஆசிரியைகளுக்கு நினைவு பரிசுகளும், கைத்தறி ஆடைகளும் அணிவிக்கப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்களும் ஒருங்கிணைப்பாளர்களுமான சரவணசெல்வம், கார்த்திக், காஜாமைதீன், பிரபாகரன், சரவணன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here